207.ஆண்டவரின் உறைவிடம் அருமையானது
ஆண்டவரின் உறைவிடம் அருமையானது
அதைத்தேடி என் ஆன்மா தவிக்கின்றது - 2
உள்ளமும் உடலும் பாடுகின்றது - 2
உன்னதரில் அடைக்கலம் ஆனது ஆஆஆ
1. இறைவனின் இல்லத்திலே இனிதே வாழ்ந்திருப்பேன்
இனிவரும் நாளெல்லாம் புகழ் பாடுவேன்
இறைவன் காத்திடுவார் உறுதியில் தளர்வதில்லை
வலுமிகு கரங்களாலே வழிகாட்டுவார்
வறட்சியான வாழ்க்கையிலே நீரூற்றாய் வருகிறார்
வளமைக்கான அருள்பொழிந்து வழிநடத்திச் செல்கிறார் - 2
வேண்டுதலைக் கேட்கிறார் கனிவுடனே பார்க்கிறார்
2. ஒருநாள் போதுமே திருநாள் ஆகுமே
இறைவனின் இல்லத்தில் தங்கும் நேரமே
இருளும் சாய்ந்திடும் அருளொளி சூழ்ந்திடும்
இறைவனில் என் வாழ்வு இதமாகுமே
வழியும் ஒளியும் வாழ்வுமாகி நடத்திச் செல்லும் தலைவனே
அருளினையும் மேன்மையையும் அளிப்பவரும் இறைவனே - 2
நன்மைகளை வழங்குவார் நம்பும் மனிதர் வாழுவார்