211. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்
அவர் வழியில் இன்பம் காண்போர் பேறுபெற்றோர் - 2
1. மனம் இரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மைகள் அடைவார்
தம் அலுவல்களில் நீதியுடன் அவர் செயல்திறன் தருவார் - 2
எந்நாளுமே அவர் அசைவுறார் எல்லார் நெஞ்சிலும் நிறைவார் - 2
தீயதேதும் பயமுறுத்தாது நம்பிடும் இதயம் அசையாது
2. அவர் மரபு பூவுலகில் மிகவே வலியதாய் இருக்கும்
நேர்மையுள்ளோர் தம் தலைமுறை
தலைமுறை ஆசிகள் பெறும் - 2
சொத்து செல்வம் எல்லாம் இல்லம் தங்கும்
என்றென்றுமே அவர் நீதி நிலைக்கும் - 2
இருளினில் ஒளியென விளங்கிடுவார்
அவர் அருளும் இரக்கமும் அடைந்திடுவார்