முகப்பு


215. ஆண்டவரே உம் பேரன்பு உயர்ந்துள்ளது
ஆண்டவரே உம் பேரன்பு உயர்ந்துள்ளது
முகில்களையே உம் நேர்மை தொடுகின்றது
உமது நீதி மலைகளைப் போல் வளர்ந்துள்ளது
உமது தீர்ப்பு கடல்களைப் போல் ஆழமானது
இறைவா இறைவா இறைவா என் இறைவா

1. சிறகின் நிழலில் புகலிடம் காண்கின்றேன்
கரத்தின் வலிமையை நாளும் உணர்கின்றேன் - 2
உம் இல்லத்தில் என்றும் தங்கி மகிழ்ந்திடுவேன்
உம் இதயத்தின் நிழலில் என்னையே மறந்திருப்பேன்
என் தாகம் தீர்ப்பவரே என் வாழ்வை மீட்பவரே - இறைவா

2. வாழ்வின் ஊற்றால் தாகம் தீர்க்கின்றீர்
உமது ஒளியால் என்னை நிரப்புகின்றீர்
பொல்லார் தீயோர் கரம் நின்று காத்திடுவீர்
உமது நீதியால் என்னை நிறைத்திடுவீர் - என் தாகம்