முகப்பு


218. ஆண்டவரே உமதன்பில் குறைவே இல்லையே
ஆண்டவரே உமதன்பில் குறைவே இல்லையே
உந்தன் அன்பில் மகிழ்வேன்
துதிபாடி என்றும் களிப்பேன் - 2
உந்தன் அன்பில் மகிழ்வேன் ( என்றும் ) - 4

1. உனக்காக ஒரு பாடல் இசைத்தேன் தேவனே - 2
சீவனாய் நாதமாய் என்னில் எழுந்திடுவாய் - 2
நீயில்லா வாழ்வில்லை
உணர்ந்தேன் தெய்வமே ( இனி ) - 2 உந்தன்

2. என்மீது அன்பு கொண்ட எந்தன் தேவனே - 2
நேசமாய்த் தாயன்பாய் என்னில் வந்திடுவாய் - 2
இணையில்லா வல்லமையை
உணர்ந்தேன் தெய்வமே ( இனி ) - 2 உந்தன்