முகப்பு


219. ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
உமக்கே நான் அன்பு செய்கின்றேன் - 2
அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்
அவரே என் கேடயம் வலிமையும் துணையும் - 2

1. என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க
என் அன்பு தேவன் அடைக்கலமானார் - 2
நெருக்கடியில்லாத இடத்திற்கு அழைத்தாரே
நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தாரே

2. வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே
வலியையும் நலமாய் ஆக்கினார் அவரே - 2
எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க
எந்நாளும் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக - 2