முகப்பு


223. ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்
ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்
கருவினிலே என்னைத் தெரிந்து கொண்டீர்
கரங்களில் என்னைப் பொறித்துள்ளீர்
எந்தன் காலமெல்லாம் என்னைக் காணுகின்றீர்

1. நடப்பதும் படுப்பதும் நான் செல்லும் வழிகளும்
எல்லாம் உம் பார்வையிலே
அமர்வதும் எழுவதும் நினைவுகள் முழுவதும்
எல்லாம் உன் கையிலே - 2
என் முன்னும் என் பின்னும் எனைச் சூழும் தேவா - 2
என் உள்ளம் நீ வாருமே - 2

2. வானமே சென்றாலும் பாதாளம் படுத்தாலும்
அங்கே உன் கைவண்ணமே
நினைவில் நான் நின்றாலும் கடல்தாண்டிச் சென்றாலும்
அங்கேயும் உன் சித்தமே - 2
எங்கே நான் சென்றாலும் எதை நான் செய்தாலும் - 2
உன் கைகள் எனைத் தாங்குமே - 2