முகப்பு


228. ஆண்டவரை அகமகிழ்ந்து போற்றுங்கள்
ஆண்டவரை அகமகிழ்ந்து போற்றுங்கள்
என்றென்றும் அவர் பெயரைப் பாடுங்கள் - 2
நாம் போற்றவும் புகழவும் தகுதியானவர் - 2

1. அவர் மாட்சியுள்ள திருநாமத்தைப் போற்றுங்கள்
அவர் மகிமையுள்ள ஆலயத்தில் போற்றுங்கள் - 2
என்றென்றும் எல்லோர்க்கும் மேலாக வாழ்த்துங்கள்
ஆண்டவரைப் போற்றுங்கள் - 2 தினம்
அவர் அரசின் அரியணைமேல் ஆண்டவரைப் போற்றுங்கள்
படைப்பு அனைத்தும் படைத்த தேவன் புகழைப் பாடுங்கள்
மகிமை மாண்பு கொண்ட தேவன் புகழைப் பாடுங்கள் - 2

2. வானம் காற்றும் மலையும் உம்மை வாழ்த்தட்டும்
ஆறுகளே குன்றுகளே போற்றட்டும்
ஆண்டவரின் எல்லாவித படைப்புகளே
வாழத்துங்கள் ஆண்டவரைப் போற்றுங்கள் - 2 தினம்