229. ஆண்டவரைஎனதுஉள்ளம்போற்றிப்புகழ்ந்துமகிழ்கின்றது
ஆண்டவரைஎனதுஉள்ளம்போற்றிப்புகழ்ந்துமகிழ்கின்றது - 2
என் மீட்பராம் கடவுளை நினைந்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது - 2
ஒளியும் வழியும் எழிலே போற்றி போற்றி
இறையே அருளே கனிவே போற்றி போற்றி
திருவே நிறைவே உயர்வே போற்றி போற்றி
உயிரே உறவே இறையே போற்றி போற்றி - ஆண்டவரை
1. ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலையைக்
கனிவுடன் கண்ணோக்கினார்
இதுமுதல் எல்லாத் தலைமுறைதோறும்
எனைப் பேறுபெற்றவர் என்பார்
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு
அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார் - 2
தூயவர் என்பதே அவர் பெயராம் - 2 ஒளியும்
2. இறைவனைப் பணிந்து நடப்போர் மீது
தலைமுறையாய் இரக்கம் காட்டினார்
அவர்தம் தோள்வலிமை எத்துணைப் பெரிது
செருக்குற்றோரைச் சிதறடித்தார்
தாழ்நிலை இருப்போரை வானுயர உயர்த்தி
செல்வரை வெறும் கையராக்கினார் - 2
பசிப்பிணி இல்லா வாழ்வு தந்தார் - 2 ஒளியும்
என் மீட்பராம் கடவுளை நினைந்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது - 2
ஒளியும் வழியும் எழிலே போற்றி போற்றி
இறையே அருளே கனிவே போற்றி போற்றி
திருவே நிறைவே உயர்வே போற்றி போற்றி
உயிரே உறவே இறையே போற்றி போற்றி - ஆண்டவரை
1. ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலையைக்
கனிவுடன் கண்ணோக்கினார்
இதுமுதல் எல்லாத் தலைமுறைதோறும்
எனைப் பேறுபெற்றவர் என்பார்
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு
அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார் - 2
தூயவர் என்பதே அவர் பெயராம் - 2 ஒளியும்
2. இறைவனைப் பணிந்து நடப்போர் மீது
தலைமுறையாய் இரக்கம் காட்டினார்
அவர்தம் தோள்வலிமை எத்துணைப் பெரிது
செருக்குற்றோரைச் சிதறடித்தார்
தாழ்நிலை இருப்போரை வானுயர உயர்த்தி
செல்வரை வெறும் கையராக்கினார் - 2
பசிப்பிணி இல்லா வாழ்வு தந்தார் - 2 ஒளியும்