முகப்பு


238. ஆயர் என் ஆண்டவர் ஆதலின் குறையில்லை - 2
ஆயர் என் ஆண்டவர் ஆதலின் குறையில்லை - 2
பசும்புல் வெளிமீதென்னை ஓய்வு கொள்ளச் செய்கின்றார் - 2
அமைதியான நீர் நிலை தேர்ந்து அழைத்துச் செல்கின்றார் - 2
புத்துயிர் அளிப்பார் - நெஞ்சில் தெம்புகள் தருவார்
தன் பெயர் பொருட்டு நீதி நெறி வழி அமைப்பார்

1. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கிலே நான் நடக்க நேரிடினும் - என்
துணையாக நீரே இருப்பதால் தீது எதற்கும் அஞ்சிடேன்
உன் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றிடும் - வழிப்
பாதைகளை எனக்கு அமைத்துக் கொடுத்திடும் - தீது
குறுக்கீடு செய்தாலும் தகர்ந்திடும்

2. எதிராளி கண்கள் முன்பிலே எனக்கு விருந்து படைக்கின்றீர் - என்
தலைமீது தைலம் பூசினீர் கிண்ணம் நிரம்பச் செய்கின்றீர்
உம் பேரன்பு எனைச் சூழ்ந்து வந்திடும்
உம் அருள் நன்மை எனை நாளும் காத்திடும் - நானும்
நெடுங்காலம் உம் வீட்டில் வாழுவேன்