முகப்பு


245. இறைவா என் அகம் உயர்த்தி உமை நோக்கினேன் - உம்
இறைவா என் அகம் உயர்த்தி உமை நோக்கினேன் - உம்
பேரன்பின் மேன்மையை நினைந்தருளும் - இறைவா
அருள் கூர்ந்து வழிகாட்டும்

1. உமை நம்பும் யாரும் வெட்கம் அடையாரே - எங்கும்
பகை எண்ணி சூழ்ச்சி செய்வோர் வெட்கம் அடைவாரே
நகைப்பதற்குப் பகைவர் கையில் தள்ளி விடாதேயும் - என்னை
வசைபாடும் தீயோர் நாவில் சிக்க விடாதேயும்
இறைவா உம் பாதைகள் அறிந்துணர்ந்தேன் - 2 நான்
பறைசாற்றும் உண்மை நெறியில் நிறைவு கண்டேன்
உம்மைத் தேடும் என்னில் பாவம் பலவாகினும் - உம்
இரக்கம் கொண்டு எனை மன்னித்து மீட்பைத் தந்தருளும்

2. நல்லவராம் கடவுள் நீர் நேர்மை உள்ளவரே - எங்கும்
எளியோர்க்கும் எல்லார்க்கும் வழிகள் சொல்பவரே
நீரே அடைக்கலம் என்றிருப்போர் நலமாய் வாழ்வாரே - என்றும்
உமக்கு அஞ்சி நடப்போர் உம் உறவில் மகிழ்வாரே
வாய்மை உம் நேர்மை என் அரணாகவே - 2 உம்
தாய்மையை என்றும் நம்பி வாழ்ந்திடுவேன்
உம்மைத் தேடும் என்னில் பாவம் பலவாகினும் - உம்
இரக்கம் கொண்டு எனை மன்னித்து மீட்பைத் தந்தருளும்