முகப்பு


246. இறைவா என் இறைவா நீரே என் ஒளியும் மீட்பும்
இறைவா என் இறைவா நீரே என் ஒளியும் மீட்பும்
யாரைக் கண்டும் பயப்படேன் இனி - 2

1. தீயவர் என்னை எதிர்க்கையில் அவரே இடறிவிழுவார்
எனக்கெதிராய் என்ன நேர்ந்தாலும் என் உள்ளம் அஞ்சாது-2
நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் - 2
யாரைக் கண்டும் பயப்படேன் - இனி - 2

2. துன்பம் வரும் நாளில் என்னைக் கூடாரத்தில் மறைப்பார்
எதிரிகள் நடுவில் என்னைப் பாதுகாப்பாய் வாழச் செய்வார் - 2
நான் வாழ்வோரின் நாட்டில் நலன்களைக் காண்பேன் - 2
யாரைக் கண்டும் பயப்படேன் இனி - 2