256. உன் துணையான ஆண்டவர் - தம்
உன் துணையான ஆண்டவர் - தம்
கிருபைதனை பொழிந்திடுவார் - உன்னை
விடுவிக்கவும் உன்னைக் காத்திடவும் - 2
அன்பான தேவன் இவர் இருக்க இனி ஏதும் குறையில்லை
1. இலைகள் உதிர்வதனால் மரங்கள் மரிப்பதில்லை
பரமனின் திருவருளால் லலல்ல லலல்லா புதிதாய் வளர்ந்திடுமே
சூரியன் சாய்வதனால் இருளின் வெற்றியல்ல
மீட்பரின் வல்லமையால் லலல்ல லலல்லா புதுநாள் புலர்ந்திடுமே
இயேசுவின் மார்பினிலே எப்போதுமே சாய்ந்திடுமே
மரணமே ஆனாலும் உன் முன்னே மண்டியிடும்
2. உளிகொண்டு அடிப்பதனால் கல்லுக்குத் தோல்வியல்ல
பரமனின் திருவருளால் லலல்ல லலல்லா சிற்பமாய் பிறப்பெடுக்கும்
தேய்பிறை வருவதனால் நிலவின் அழிவு அல்ல
மீட்பரின் வல்லமையால் லலல்ல லலல்லா வளர்பிறை வந்திடுமே
இயேசு ஆண்டவரை எப்போதுமே சார்ந்து இரு
பழையன அழிந்து விடும் புதுவாழ்வு உனைச் சேரும்