முகப்பு


259. உன்னதரின் பாதுகாப்பில் என்றும் வாழ்பவர்
உன்னதரின் பாதுகாப்பில் என்றும் வாழ்பவர்
வல்லவரின் நிழலிலே தங்கி இருப்பவர் - 2
அவர் ஆண்டவரை நோக்கி உரைக்கிறார்
நீரே எனது புகலிடம் எனது அரணும் கோட்டையும்
நான் நம்பி இருக்கும் நல்ல இறைவன் நீ - 2

1. வேடரின் கண்ணியினின்றும்
கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும்
ஆண்டவர்தாமே பாதுகாத்திடுவாரே - 2
அவர்தம் சிறகுகளாலே உம்மை அரவணைப்பாரே
அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்
அவர்தம் உண்மையும் கேடயம் கவசமும் ஆகும்

2. இரவதின் உறை திகிலுக்கும் பகலிலே பாயும் அம்புக்கும்
ஒருபோதுமே நீர் அஞ்சிட மாட்டீர் - 2
இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நீர் அஞ்சவே மாட்டீர்
பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சவே மாட்டீர்
தாக்கும் ஆயிரம் பதினாயிரம்பேர் வெல்லாரே