முகப்பு


265. என் ஆயன் என் நேச ஆண்டவர்
என் ஆயன் என் நேச ஆண்டவர்
இனி எனக்கெந்த குறையுமில்லை
மனம் களைத்திடும் போதவர் அருகிருந்து
என்னுள் புதுஉயிர் ஊட்டுகின்றார் - 2

1. அன்புள்ள அவரின் இல்லத்திலே
ஆயுள் முழுதும் வாழ்ந்திருப்பேன் - 2

2. தீமைகள் எதற்கும் அச்சம் இல்லை
ஆண்டவர் என்னோ டிருப்பதனால் - 2

3. நேரிய வழியில் என்னை நடத்தி - தம்
திருப்பெயரை மகிமை செய்தார் - 2