முகப்பு


268. என் ஆற்றலின் ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்திடுவேன்
என் ஆற்றலின் ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்திடுவேன்
திருவடி அமர்ந்திடுவேன் கவலைகள் மறந்திடுவேன் - 2

1. அரணும் கோட்டையும் அவர் தாமே
வலிமையும் துணையும் அவர் கரமே - 2
வாழ்வும் வளமையும் வழங்கிடுவார்
இடறும் வேளையில் காத்திடுவார் - 2
வாக்கு அழியவே விடுவதில்லை மானிடர் துயரில் மகிழ்வதில்லை
தோளில் தினமும் எனைச் சுமந்திடுவார்
தாயைப் போலத் தினம் காத்திடுவார் - என்

2. உமது பேரன்பைப் புகழ்ந்திடுவேன்
உமது நினைவினில் மகிழ்ந்திடுவேன் - 2
அடைக்கலம் உன்னில் கண்டிடுவேன்
சிறகுகள் நிழலில் அகமகிழ்வேன் - 2
கால்கள் சோர்ந்திட விடுவதில்லை
காத்திடும் கண்கள் அயர்வதில்லை
தேடி வந்து எனை மீட்டிடுவாய்
தேவைகள் யாவையும் தீர்த்து வைப்பாய் - என்