முகப்பு


269. என் ஆற்றலின் ஆண்டவரை நான் எந்நாளும்
என் ஆற்றலின் ஆண்டவரை நான் எந்நாளும்
போற்றிடுவேன் - நல் அருள்மொழி கேட்க
காலமெல்லாம் அவர் காலடி அமர்ந்திடுவேன் - 2

1. ஆண்டவர் எனது அரணாவார்
அவரே எனக்கென்றும் துணையாவார் - 2
வலிமையும் வாழ்வும் வழங்கும் நல்தேவன்
என்னுடன் இருக்கின்றார் என்றும் இருக்கின்றார்

2. ஆண்டவர் எனது மீட்பராவார்
அவரே எனக்கென்றும் ஒளியாவார் - 2
வாழ்வாய் வழியாய் விளங்கும் நல்தேவன்
சீர்வழி நடத்திடுவார் அவர் வழி தொடர்ந்திடுவேன்