முகப்பு


272. என்னுயிரே ஆண்டவரைப் போற்றிப் பாடிடு
என்னுயிரே ஆண்டவரைப் போற்றிப் பாடிடு ஆ
என்னுள்ளமே அவர் பெயரை ஏற்றிப் பாடிடு ஆ - 2
என் உயிருள்ள வரையில் நான் பாடுவேன்
எந்தக் காலமும் நேரமும் உன் புகழ் பாடியே
என்றென்றும் மகிழ்வேன்

1. ஆண்டவர் நல்லவர் ஆ சினங் கொள்ளாதிருப்பவர் ஆ
நம் பாவங்களுக்கேற்ப நடத்தமாட்டார்
நம் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார் - 2
தமக்கஞ்சுவோர்க்குக் காட்டும் அன்பு உயர்ந்ததுவே
அது மண்ணினின்று விண்ணுலகம் உயர்ந்ததுவே
அவர் தம் சொல் கேட்டு நடப்போர் எல்லோரும்
அவரைப் போற்றுங்கள்
காற்றே கடலே நதியே அலையே இறைவன் புகழைப் பாடு
மலையே மலரே முகிலே மழையே தேவன் புகழைப்பாடு -2

2. பொறுமையும் அன்பும் ஆ கொண்டவர் அண்டவர் ஆ
அவர் நீதி நம் மீது இருக்கின்றதே
அவர் வாக்கு நம் வாழ்வில் நிலைக்கின்றதே - 2
அவர் ஒடுக்கப்பட்டோருக்கு வாழ்வளிப்பார்
தம் செயல்களை அனைவரும் காண வைத்தார்
அவர் தம் சொல் கேட்டு நடப்போர் எல்லோரும்
அவரைப் போற்றுங்கள்