273. என்னைக் காக்கும் ஆண்டவர்க்கு
என்னைக் காக்கும் ஆண்டவர்க்கு
எந்நாளும் புகழ் இசைப்பேன்
என் உயிர் உள்ளவரை தேவனைத் துதித்திடுவேன் - 2
1. ஆயிரம் ஆயிரம் பகைவரெல்லாம்
சூழ்ந்தாலும் எனக்குப் பயமில்லையே
ஆகாயம் என் மேல் விழுந்தாலும்
ஆண்டவரே என்னைத் தாங்கிடுவீர் - 2
கோட்டையும் அரணும் நீர் இருக்க
குறைவின்றி நலமாய் நான் வாழ்வேன் - 2
மலைபோல் உறுதியாய் நின்றிடுவேன்
எதிரிகள் சிதறி ஓடிடுவார்
2. ஆண்டவரே உம்மை நம்பியுள்ளேன்
உமக்கு இன்னிசை முழங்கிடுவேன்
உம் சினம் நொடியில் மறைந்திடுமே
உம் கருணையும் அன்பும் நிலைத்திடுமே - 2
பெருமையும் புகழும் எனக்குத் தந்தீர்
கோட்டையும் அரணுமாய் எனைச் சூழ்ந்தீர் - 2
வார்த்தையில் தவறா என் இறைவா
அடைக்கலம் புகுந்தேன் உம்மிடமே
எந்நாளும் புகழ் இசைப்பேன்
என் உயிர் உள்ளவரை தேவனைத் துதித்திடுவேன் - 2
1. ஆயிரம் ஆயிரம் பகைவரெல்லாம்
சூழ்ந்தாலும் எனக்குப் பயமில்லையே
ஆகாயம் என் மேல் விழுந்தாலும்
ஆண்டவரே என்னைத் தாங்கிடுவீர் - 2
கோட்டையும் அரணும் நீர் இருக்க
குறைவின்றி நலமாய் நான் வாழ்வேன் - 2
மலைபோல் உறுதியாய் நின்றிடுவேன்
எதிரிகள் சிதறி ஓடிடுவார்
2. ஆண்டவரே உம்மை நம்பியுள்ளேன்
உமக்கு இன்னிசை முழங்கிடுவேன்
உம் சினம் நொடியில் மறைந்திடுமே
உம் கருணையும் அன்பும் நிலைத்திடுமே - 2
பெருமையும் புகழும் எனக்குத் தந்தீர்
கோட்டையும் அரணுமாய் எனைச் சூழ்ந்தீர் - 2
வார்த்தையில் தவறா என் இறைவா
அடைக்கலம் புகுந்தேன் உம்மிடமே