276. கடவுளேஉமதுபேரன்புஎத்துணைஅருமையாய்இருக்கின்றது
கடவுளேஉமதுபேரன்புஎத்துணைஅருமையாய்இருக்கின்றது
கனிவுமிகு உம் சிறகின் நிழல் நல் புகலிடமாய் அமைகின்றது
வாழ்வு தரும் ஊற்று - அது
உம்மிடமே உள்ளது
ஒளி தரும் உம் வார்த்தை - அது
எம்மிடம் ஒளிர்கின்றது
1. இறைவா உம் பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது - உம்
இல்லத்தின் செழுமைகளால் பூவுலகு நிறைகின்றது - 2
உம் வாக்குப் பிறழாமை மலை மழை முகில்களைத் தொடுகின்றது
ஆண்டவர் உம் நீதி - அது
உயர் மலைபோல் உள்ளது
உம் தீர்ப்பின் ஆழம் - அது
பெருங்கடல் போல் உள்ளது
2. மாந்தரையும் பல் உயிர்களையும் பாதுகாப்பவர் நீர் இறைவா
தாகத்தைத் தணிக்கின்ற வற்றாத நீரோடை நீர் இறைவா - 2
நேரிய நல் மனத்தோர்க்கு அறநெறி அருள்பவர் நீர் இறைவா
செருக்குடையோரின் கால் - என்னை
நசுக்கவே விட மாட்டீர்
பொல்லாதவரின் கை - என்னைப்
பிடிக்கவே விட மாட்டீர்