277. கடவுளை நாடித் தேடுவோரே - உங்கள்
கடவுளை நாடித் தேடுவோரே - உங்கள்
உள்ளம் ஊக்கம் அடைவதாக
இறைவன் அருளும் உயிர்மீட்பு
உலகின் படைப்புக்குப் பாதுகாப்பு
கடவுள் நாடித் தேடுவோமே - என்றும்
அவர்தம் மாட்சியைப் பாடுவோமே
துணை செய்வதில் அவர் மாறாதவர் - விண்
ணப்பத்துக்கு மறுமொழி தருகின்றவர்
படைகளின் ஆண்டவரே பாது காப்பவரே
1. காரணம் இல்லாமல் எனை வெறுப்போர் - பெரும்
பொய்க் குற்றம் சாட்டி வதைக்கின்றனர்
படு குழி பாழ் வெளி பழி இழிவு - எனக்
கொடுமைகள் விதைத்துச் சிதைக்கின்றனர்
தேடி நின்றேன் மன ஆறுதலை - எனைத்
தேற்றிடுவார் என யாரு மில்லை - உமை
நம்பினேன் போக்கும் என் அஞ்சுதலை - என்றும்
உம் அன்பு அருளுக்கு இணையில்லை
2. என் மதி கேடுகள் அறிந்தவரே - என்
தீவினை எல்லாம் தெரிந்தவரே
என் சிறை நெருக்கடி உணர்ந்தவரே - என்
வெட்கக் கேடும் மானக் கேடும் கண்டவரே
மனம் உடைந்து நான் வருந்தி நின்றேன் - இனி
மறைத் திடாதேயும் திரு முகத்தை - கடுஞ்
சினம் கொண்ட உம் விழி காண்கின்றேன் - என்
கறைகுறை களைந் தருளும் நலத்தை
உள்ளம் ஊக்கம் அடைவதாக
இறைவன் அருளும் உயிர்மீட்பு
உலகின் படைப்புக்குப் பாதுகாப்பு
கடவுள் நாடித் தேடுவோமே - என்றும்
அவர்தம் மாட்சியைப் பாடுவோமே
துணை செய்வதில் அவர் மாறாதவர் - விண்
ணப்பத்துக்கு மறுமொழி தருகின்றவர்
படைகளின் ஆண்டவரே பாது காப்பவரே
1. காரணம் இல்லாமல் எனை வெறுப்போர் - பெரும்
பொய்க் குற்றம் சாட்டி வதைக்கின்றனர்
படு குழி பாழ் வெளி பழி இழிவு - எனக்
கொடுமைகள் விதைத்துச் சிதைக்கின்றனர்
தேடி நின்றேன் மன ஆறுதலை - எனைத்
தேற்றிடுவார் என யாரு மில்லை - உமை
நம்பினேன் போக்கும் என் அஞ்சுதலை - என்றும்
உம் அன்பு அருளுக்கு இணையில்லை
2. என் மதி கேடுகள் அறிந்தவரே - என்
தீவினை எல்லாம் தெரிந்தவரே
என் சிறை நெருக்கடி உணர்ந்தவரே - என்
வெட்கக் கேடும் மானக் கேடும் கண்டவரே
மனம் உடைந்து நான் வருந்தி நின்றேன் - இனி
மறைத் திடாதேயும் திரு முகத்தை - கடுஞ்
சினம் கொண்ட உம் விழி காண்கின்றேன் - என்
கறைகுறை களைந் தருளும் நலத்தை