முகப்பு


286. நம்பினேன் ஆண்டவரே உம்மையே
நம்பினேன் ஆண்டவரே உம்மையே
சீயோன் மலை என்று நம்பினேன் - 2

1. எருசலேம் நகருக்கு மலைகள் உண்டு
எதிர்வரும் பகைவர்கள் பலியாவார் - 2
நல்லாரின் நாட்டில் பொல்லாங்கு மாறவும் - 2
அன்பார்ந்த ஆண்டவர் அரணாவார் - 2

2. நேரிய இதயம் நேர்கொண்ட பண்பை
சேர்த்திடும் போது சோர்வில்லை நமக்கு
கோணல் வழியில் நடப்போர் நிலைகுலைந்து போவார்
கானல் நீராய்க் கண்மறைந்து போவார்