முகப்பு


288. நம் மீட்பர் இயேசு உயிருடன் வாழுகின்றார்
நம் மீட்பர் இயேசு உயிருடன் வாழுகின்றார்
உன் அருகினிலே எப்போதும் இருக்கின்றார்
உனக்கு ஆசீர் வழங்கிடுவார் ஆசீர்வாதமாய் நீ இருப்பாய் - 2

1. உன் உயிர்த் தோழனாக உனது பக்கம் உடனிருப்பார்
உன் கால் இடறாமல் உனக்கு அவர் துணையிருப்பார் - 2
தீமைகள் உன்னை அணுகாது
வாதைகள் உன்னை நெருங்காது
கண்கள் கலங்கித் தவிக்காமல் கண்போல காலமெல்லாம்
உன்னைக் காத்திடுவார்

2. உன் கை வேலைகளில் உயர்ந்த பலன் உனக்களிப்பார்
உந்தன் கனவுகளை நனவாக்கி உதவிடுவார் - 2
உன்னைச் சூழ்ந்து அவர் இருப்பார்
உன்னைக் கைவிடவே மாட்டார்
உந்தன் துயரம் மகிழ்ச்சியாகும் உன் செபமும்
உன் சொந்தமும் உன்னில் தங்கிடுமே