290. நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே - 2
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே - 2
1. ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன் துணையில் வாழ்கையில் துயர் வெல்லுமோ - 2
தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் - 2
ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது
போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே - 2
2. இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ - 2
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் - 2
என்றென்றும் உன் ஆசி கொண்டு - வரும்
நல்வாழ்வைக் கண்முன்னே கண்டு
இயேசுவே இயேசுவே - 2