முகப்பு


294. நெஞ்சமே நீ விழித்தெழு வீணையே விழித்தெழு
நெஞ்சமே நீ விழித்தெழு வீணையே விழித்தெழு
நீதியின் இறைவனை நாதத்தின் தலைவனைப்
புகழ்ந்து நான் இசைத்திட பொழுதுமே விடிந்திட

1. வான்வரை உயர்ந்தது வல்லமை நிறைந்தது
இறைவனின் பேரிரக்கம்
மேகங்கள் வரையில் மேன்மையாய் நிற்கும்
மேலவன் சொல்வன்மை
விண்ணகம் அவர் அரியணையே மண்ணகம்
அவர் கால்மனையே - 2

2. விடுதலை தேடிடும் அடிமைகள் எவர்க்கும் வலக்கரம் நீட்டிடுவார்
எதிரிகள் வலையில் விழுந்து விடாமல்
என்றுமே காத்திடுவார் மனிதர் உதவி வீழ்ந்தாலே
கடவுள் துணையில் செல்வேனே - 2