295. நெஞ்சார ஆண்டவர்க்கு நன்றி சொல்லுவோம்
நெஞ்சார ஆண்டவர்க்கு நன்றி சொல்லுவோம்
நெஞ்சம் நெகிழ நன்மைகள் நமக்குச் செய்ததால் - 2
1. ஆண்டவரின் செயல்கள் உயர்ந்து நிற்பவை
அவற்றில் இன்பம் காண்பதே நமது பெருமை - 2
அவர் செய்த நன்மையெல்லாம் மேன்மையானவை
ஆய்ந்து நோக்கின் அவை யாவும் அன்பின் வலிமை
2. இரக்க உணர்வு மிகுந்தவர் நமது ஆண்டவர்
இடைவிடாது நம்மைத் தமது நினைவில் கொண்டவர் - 2
இனியவரான அவர் நம்மால் நம்பத் தகுந்தவர்
இணையில்லாக் கருணையால் இதயம் சுமப்பவர்