முகப்பு


301. படைகளின் ஆண்டவரே உமது இல்லம் அழகானது
படைகளின் ஆண்டவரே உமது இல்லம் அழகானது
உமது இல்லமே அழகானது - 2 படைகளின் ஆண்டவரே

1. உமது இல்லத்திலே தங்கிடுவோர் என்றும்
உண்மையில் பேறுபெற்றோர் - 2
எந்நாளும் உம்மையே புகழ்வார்கள் - 2
உமது பேரன்பை எண்ணி மகிழ்வார்கள்

2. வேறிடத்தில் நான் வாழ்வதிலும் உமது ஆலயம் மேலானது - 2
அருளும் மேன்மையும் அளிப்பவரே - 2
உமது உறைவிடம் எனக்குப் புகலிடமே