முகப்பு


303. படைப்புகளே நம் ஆண்டவரை
படைப்புகளே நம் ஆண்டவரைப்
பாடுங்களே நீங்கள் பாடுங்களே - 2
அருஞ்செயல் எனக்கு அவர் செய்தார்
ஆனந்தமே என்னில் ஆனந்தமே

1. அன்பீந்தார் அருளீந்தார் பண்பும் பணிவும் அவரளித்தார் - 2
யார் என்னைக்கைவிடினும்ஆண்டவர் என்னை அழைக்கின்றார்- 2
இறைவனின் அன்பினுக்கு இந்த உலகினில் உவமையுண்டோ

2. மனம் கலங்கி பரிதவித்தேன் நிம்மதி மனத்தில் எனக்களித்தார் - 2
மாசுடன் நான் நிற்கையிலே மன்னிப்பு எனக்கு அவரளித்தார் - 2
இறைவனின் அன்பினுக்கு இந்த உலகினில் உவமையுண்டோ