முகப்பு


305. பாதுகாக்கும் மீட்பரே என் பாறையான இயேசுவே
பாதுகாக்கும் மீட்பரே என் பாறையான இயேசுவே - 2
கேடயமும் தந்தன தானா புகலிடமும் தந்தன தானா - 2
வாழ்வில் எல்லா வளங்களையும் வாரி வழங்கும் இறைவனே

1. செழித்து வளரும் செடிகள் போல இளைஞர் வளரட்டும்
செதுக்கிய சிலைகள்போல் பிள்ளைகள் வளரட்டும் - 2
பசியில்லா நிலையாலே வாழ்வு ஓங்கட்டும் - 2
எங்கள் வாழ்வு தங்கமாகும் உம் வாக்கால் - 2

2. வகை வகையாய் தானியங்கள் எமக்குக் கிடைக்கட்டும்
உம்மருளால் களஞ்சியங்கள் நிரம்பி வழியட்டும் - 2
ஆடுகளும் மாடுகளும் நன்றாய் இருக்கட்டும் - 2
எங்கள் வாழ்வு தங்கமாகும் உம் வாக்கால் - 2