முகப்பு


309. போற்றுங்கள் போற்றுங்கள் ஆண்டவரைப் போற்றுங்கள்
போற்றுங்கள் போற்றுங்கள் ஆண்டவரைப் போற்றுங்கள்
வாழ்த்துங்கள் வாழ்த்துங்கள் அவர் திருப்பெயரை வாழ்த்துங்கள்
நல்லவர் நம்பத் தகுந்தவர் - அவர்
வல்லவர் நம்மை வாழ்விப்பவர் - போற்றுங்கள்

1. பாவங்கள் மன்னித்து பழிதனை விலக்கினார்
போற்றுங்கள் போற்றுங்கள்
பாசம் பொங்க வாரி அணைத்து பரிவோடு நம்மைத் தாங்கினார்
போற்றுங்கள் போற்றுங்கள்
அவர் தரும் மீட்பினையே நாள்தோறும் அறிவியுங்கள்
மக்களினம் அனைவருக்கும் - அவர்
மாண்பினைச் சொல்லிடுங்கள் - போற்றுங்கள்

2. சாவின் பிடிதனை விடுவித்துக் காத்திட்டார்
போற்றுங்கள் போற்றுங்கள்
நேசம் நிறைந்த வார்த்தைகளாலே நெருக்கடியில் தேற்றினார்
போற்றுங்கள் போற்றுங்கள்
வியத்தகு செயல்களையே நிறைவேறச் சொல்லிடுங்கள் - 2
தெய்வங்கள் அனைத்திலுமே - இவர்
சிறந்தவர் என்றிடுங்கள் - போற்றுங்கள் - 2