முகப்பு


317. யாழிசைத்து ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள்
யாழிசைத்து ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள்
மகிழ்ச்சிக் குரல் எழுப்பிப் புதுப்பாடல் பாடுங்கள் - 2
நீதிமான்களே அவரில் களிகூருங்கள் - 2
நேர்மையுள்ளோர் என்றும் அவரில் மகிழுங்கள்
ஆண்டவரின் வாக்குகள் நேர்மையாக உள்ளன
அவருடைய செயலெல்லாம் நம்பிக்கைக்குரியன - 2

1. கடல்நீரைக் குவியல்போல் சேமித்து வைத்தாரே
மண்ணுலகைப் பேரன்பால் நிறைத்துக் கொண்டாரே - 2
ஆண்டவரின் வாக்கினால் வானங்கள் உண்டாயின
அவர் சொல்லின் ஆற்றலால் கோள்கள் உருவாயின
அனைத்துலகும் ஆண்டவர்க்கு அஞ்சி நடப்பதாக
அவர் தேர்ந்த மக்களினம் பேறுபெறுவதாக

2. ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்
அவர் உள்ளத் திட்டங்களோ தலைமுறையாய் நீடிக்கும் - 2
ஆண்டவரை நம்புவோர்க்கு அவரே துணை கேடயம்
அவருக்கஞ்சி வாழ்வோர்க்கு அவர் அன்புக் காவியம்
தீயோரின் திட்டங்களை முறியடிக்கின்றார் - நல்
மாந்தர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றார்