முகப்பு


320. வான் படைகளின் ஆண்டவரே
வான் படைகளின் ஆண்டவரே
உமது இல்லம் எத்துணை அருமையாய் உள்ளது

1. என் ஆன்மா ஆண்டவருடைய ஆலய முற்றங்களை
விரும்பித் தேடிச் சோர்ந்து போகின்றது
என் உள்ளமும் உடலும்
உயிருள்ள இறைவனை நினைத்துக் களிகூர்கின்றன

2. அடைக்கலான் குருவிக்கு வீடும் தகைவிலான் குருவிக்குத்
தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கிடைத்தது
சேனைகளின் ஆண்டவரே என் அரசே என் இறைவா
உம் பீடங்களுள்ள இடத்திலே கிடைத்தது