முகப்பு


242. இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா
இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா
உம்மை நான் நம்பியுள்ளேன் - 2

1. தம் சிறகுகளால் உன்னை மூடிக் காப்பார்
அவருடைய இறக்கைகளுக்கடியில் நீ அடைக்கலம் புகுவாய்
தவறாத அவருடைய வார்த்தை உனக்குக்
கேடயமும் கவசமும் போல் இருக்கும்

2. தீமை உன்னை அணுகாது
துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது
ஏனெனில் நீ செல்லும் இடங்களில் எல்லாம்
உன்னைக் காக்கும்படி தூதருக்கு
உன்னைக் குறித்துக் கட்டளையிட்டார்