முகப்பு


037. அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே - 2

1. அன்புப் பணியாலே உலகை வெல்லுங்கள்
இன்பம் துன்பம் எதையும் தாங்கிடுங்கள் - 2
எளியவர் வாழ்வில் துணை நின்று
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் - 2

2. மண்ணகத்தில் பொருளைச் சேர்க்க வேண்டாம்
மறைந்து ஒளிந்து போய்விடுமே - 2
விண்ணில் பொருளைத் தினம் சேர்த்து
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் - 2