முகப்பு


349. இதயமே நீ கலக்கம் ஏன் கொள்கிறாய்
இதயமே நீ கலக்கம் ஏன் கொள்கிறாய்
காத்திடும் தேவன் உன்னிலே - 2
எங்கெங்குச் சென்றாலும் உடனிருக்கிறாய்
என்னென்ன செய்தாலும் துணையிருக்கிறாய்
இதயமே கலக்கம் கொள்வதேன் - 2

1. நீ போகும் பாதை இருளாகும் நேரம்
வழியேதும் தெரியாமல் நீ வீழ்கையில் - 2
உறவெல்லாம் உனைவிட்டுப் பிரிந்தெங்கோ செல்கையில்
துணையேதும் இல்லாமல் பயம் சூழ்ந்து கொள்கையில்
உறவாகுவார் வழிகாட்டுவார் தாயாக மார்போடு
உனை அணைத்திடுவார்
இதயமே கலக்கம் கொள்வதேன் - 3

2. உடல் நோய்கள் உள நோய்கள் உனை வாட்டும் நேரம்
உடல் சோர்ந்து உளம் சோர்ந்து நீ சாய்கையில்
துயரமே வாழ்வென்று உளம் வாடும் வேளையில்
வலுவின்றி வாழ்வின்றி தள்ளாடும் பொழுதினில்
உனைத் தேற்றுவார் வலுவூட்டுவார் எந்நாளும்
காக்கும் தேவன் உனைத் தாங்குவார்
இதயமே கலக்கம் கொள்வதேன் - 2 - இதயமே