முகப்பு


367. இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல்
இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல்
தாவி மேவி வருகின்றேன் என் நிலை நான் சொல்கின்றேன்
உன் குழந்தை நானல்லவா என்னை நோக்கி ஓடி வந்து
என்னைக் காப்பாயோ - 2

1. அன்பைத் தேடும் போது என் தந்தை நீயல்லவா
அமுதம் நாடும் போது என் அன்னை நீயல்லவா - 2
ஒரு குறையும் இன்றிக் காத்தாய் நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்
உன்னை ஒதுக்கியே வாழ்ந்த நானும் - இனி
என்ன கைம்மாறு செய்வேன் - 2

2. மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவர் நீதானையா
மனத்தில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானையா - 2
உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து
ஒரு நாளும் பிரியாமல் வளர்ந்து
உந்தன் மடியிலே தவழ்ந்து நானும் - இனி
அப்பா தந்தாய் என்று அழைப்பேன் - 2