முகப்பு


370. இன்பக் கனவொன்று நான் கண்டேன்
இன்பக் கனவொன்று நான் கண்டேன்
இறையாட்சி மலரக் கண்டேன்
எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன் - 2

1. இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன் - இறை
அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன் - 2
பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக் கண்டேன் - 2
பிறர்நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தேன் - எந்தன்
வாழ்வின் பொருள் அறிந்தேன்

2. அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன் - அகச்
சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டு கொண்டேன் - 2
நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன் - 2
நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன் - அன்பில்
நிறைவை நான் கண்டேன்