முகப்பு


391. உன்னருகில் நானிருந்தால் துன்பமெல்லாம்
உன்னருகில் நானிருந்தால் துன்பமெல்லாம்
இன்பமாகும் இயேசுவே
உன் நினைவில் நான் வாழ்ந்தால்
என் வாழ்வு ஒளியாகும் இயேசுவே - 2
இயேசுவே இயேசுவே - 2

1. உன் விழியே என் விழியானால்
இரவெல்லாம் பகலாகும் இருளெல்லாம் ஒளியாகும்
உன் அன்பில் நான் வாழ்ந்தால்
உறவெல்லாம் உயிராகும் உணர்வெல்லாம் அருளாகும்
உன் விழியின் பார்வையிலே உன் அன்பின் மகிழ்வினிலே - 2
கரம் பிடித்து வழிநடத்தும் இயேசுவே - 2 இயேசுவே - 4

2. உன் வார்த்தை எனதாகினால்
நற்செய்தி அறிவாகும் விடுதலையே வழியாகும்
உன் மகிழ்வில் நான் வாழ்ந்தால்
நம்பிக்கை நனவாகும் என் வாழ்வு பகிர்வாகும்
உன் வார்த்தை ஒளியினிலே உன் மகிழ்வின் அருளினிலே - 2
காலமெல்லாம் வழிநடத்தும் இயேசுவே - 2 இயேசுவே - 4