முகப்பு


394. உன்னை நம்பி வாழும்போது உறுதி பெறுகிறேன்
உன்னை நம்பி வாழும்போது உறுதி பெறுகிறேன்
உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்
உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன்
இறைவா இறைவா அமைதி காண்கிறேன்
நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்

1. என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்
எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் - 2
என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைப்பேன் - 2
இனி இமயமென தடைவரினும் எளிதாய்க் கடப்பேன்
எளிதாய்க் கடப்பேன் - நான் எளிதாய்க் கடப்பேன்

2. இருளின் சக்தி எந்தன் வாழ்வைப் பணியச் சொல்லுதே
இறைவா உன் நினைவு என்னைத் துணியச் சொல்லுதே - 2
உன் சொல்லின் உறுதியில் நான் பயணம் செல்லுவேன் - 2
உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்
என்றும் வாழுவேன் - நான் என்றும் வாழுவேன்