முகப்பு


454. தாயகம் முழுவதும் நாயகன் இயேசுவின்
தாயகம் முழுவதும் நாயகன் இயேசுவின்
திருப்புகழ் பாடவந்தேன்
தேனினும் இனிய என் தேவனின் நாமத்தை
தினம் தினம் போற்ற வந்தேன்
எல்லா நாவும் முழங்கிடட்டும் இயேசு கிறிஸ்து ஆண்டவர் - 2

1. கடவுளின் தன்மையில் விளங்கிய இயேசு எனக்காய் மனுவானார்
அடிமையைப் போலவே தன்னையே
தாழ்த்தி மனிதருக்கொப்பானார் - 2
தந்தையின் திருவுளம் யாவும் நிறைவேற்றி - 2
சிலுவையில் மரித்தார் என்னை மீட்டார் - எல்லா

2. இயேசுவின் திருப்பெயர் ஒருமுறை சொன்னால்
இதயத்தில் அமைதி வரும்
விண்ணும் மண்ணும் கீழுலகும் அவர் திருமுன் மண்டியிடும் - 2
பாவங்கள் விலகும் நோய்களும் நீங்கும் - 2
சாத்தானின் படைகள் தூள் தூளாய் உடையும் - எல்லா