முகப்பு


506. அர்ப்பணப்பூ நானாக உன்னிடம் வந்தேன் - என்னை
அர்ப்பணப்பூ நானாக உன்னிடம் வந்தேன் - என்னை
அர்ச்சனையாய்க் கையளிக்க உன் கரம் தந்தேன் - 2
வாழ்க்கையெனும் நெடியதொரு பயணம் யாவுமே - உந்தன்
வாழ்வு தரும் வார்த்தைகளால் வழிநடத்தவே பலி தருகின்றேன்

1. கவலைகளால் உருக்குலைந்த உலகம் யாவுமே - உந்தன்
கருணையினால் உருக்கொடுக்கும் கருவியாக்குமே
காரிருளின் நடுவிலும் கலங்கரை விளக்காய் - 2 உந்தன்
பேரருளின் பெருந்துணையில் கையளிக்க நான் பலி தருகின்றேன்

2. நாயகனே உன்னை நம்பி நானிலத்தில் நான் - இன்று
அடியெடுத்து வைக்கின்றேன் வழிநடத்துமே
இலட்சியத்தின் பாதைகளில் இடர்கள் தாண்டி நான் - உந்தன்
இறையரசைப் பரப்புகின்ற உறுதி வேண்டி நான் பலி தருகின்றேன்