முகப்பு


508.அர்ப்பணமாக்கிடுவேன் என்னை அர்ப்பணமாக்கிடுவேன்
அர்ப்பணமாக்கிடுவேன் என்னை அர்ப்பணமாக்கிடுவேன்
என் முழுமை இதயத்தோடு என் உணர்வைத் தருகின்றேன்
என் வறுமை வாழ்க்கையோடு - என்
வெறுமை தருகின்றேன்
இதை ஏற்று எனது வாழ்வை மாற்றுவாய் - இறைவா

1. ஒரு துளி காணிக்கையை ஒரு கடலாய்
உன் இரு கைகளிலே எற்கின்றாய்
மனிதனின் கவலைகளைப் பனித்துளியாய்
உன் இரு கண்களிலே துடைக்கின்றாய்
ஆபேலின் காணிக்கையை விரும்பினாய்
எனதுடம்பின் ஒரு துளியை
இங்கு ஏற்றுக்கொள்eவேண்டியே -அர்ப்பணமாகி....

2. நடக்கின்ற காலங்களின் பூங்கொடியாய்
உன் திருமேனியிலே வளர்க்கின்றாய்
வருகின்ற காலங்களை வளர் நிலமாய்
இரு கரம் உயர்த்தி நீ படைக்கின்றாய்
கைம்பெண்ணின் காணிக்கையில் உருகினாய் - உன்
புது மழைபோல் மனம் திறந்து
இந்தப் பாவி என்னை ஏற்கவே -அர்ப்பணமாகி....