முகப்பு


514. அன்பின் இறைவா எந்தன் தலைவா
அன்பின் இறைவா எந்தன் தலைவா
என்னை அளிக்கின்றேன் என்றும் உந்தன் அன்பில் வாழ
பாதம் பணிகின்றேன் நான் பாதம் பணிகின்றேன்

1. மலரில் வண்டு மயங்கி நின்று
தேனை உண்டு மகிழந்ததோ - 2 அந்த
மலரும் மயங்கும் மன்னன் உந்தன்
தியாகம் கண்டு வியந்ததோ - 2
நானும் இன்று நாளும்உந்தன் பலியாய் மாற விழைகின்றேன்

2. உலகம் யாவும் இறைவன் உந்தன்
இல்லமாக விளங்குமோ - 2 எம்
உள்ளமே உம் இல்லமாயின் கள்ளம் அதிலே கலக்குமோ - 2
நாளும் என்னை இறைவா உந்தன் இல்லமாய் நீ எழுப்புவாய்