முகப்பு


516. அன்பின் பலியாய் ஏற்பாய் - உன்னை
அன்பின் பலியாய் ஏற்பாய் - உன்னை
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்
புண்படும் மனத்தின் துயர் தணிப்பாய் - 2 எமைப்
புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்

1. வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் - அருள்
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் - 2
முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் - 2 எமைத்
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்

2. படைப்பின் மீதே பரிவிருக்க - அந்தப்
பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க - 2
படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க - 2 உனில்
படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க