முகப்பு


522. இணையில்லாத தியாகப்பலி இணைந்திட வருகின்றேன்
இணையில்லாத தியாகப்பலி இணைந்திட வருகின்றேன் - 2
அதை நினைந்து நினைந்து நன்றியினால்
கனிந்திட வருகின்றேன்
இறைவா காணிக்கை தருகின்றேன்
இதய காணிக்கை தருகின்றேன்

1. குன்றினிலே ஏற்றி வைத்த
குன்றா விளக்கின் பலியினிலே - எந்தன்
தன்னலம் கொண்டு வந்தேன்
ஏற்றென்னை மாற்றாயோ இறைவா இறைவா
இதுவே நல்ல தருணம் என்று ஏங்கும் இதயம் ஏற்பாயோ

2. சிலுவைப் பலியில் உணர்வடைந்தேன்
சிகரம் நோக்கிச் செயல் துணிந்தேன்
இயேசு என்னுடன் வருவதனால்
பயமினி எனக்கில்லை இறைவா இறைவா
தந்தை கேட்கும் நன்றிப் பலி தந்து வாழ்வின் பரிசடைவேன்