முகப்பு


526. இதயம் தர வந்தேன் அன்பை நீ தந்தாய்
இதயம் தர வந்தேன் அன்பை நீ தந்தாய் - 2
மனிதம் வாழவே மண்ணில் நீ வந்தாய் - 2
என் வாழ்வின் விடியலே வசந்தமே எனைத் தந்தேன்

1. அப்பமும் இரசமும் நான் தந்தேன்
அருளின் உருவாய் நீ வந்தாய் - 2
மண்ணின் கனிகள் நான் தந்தேன்
விண்ணின் கனியாய் நீ வந்தாய் - என் வாழ்வின்

2. உழைப்பின் பயனை நான் தந்தேன்
வலிமை எனக்கு நீ தந்தாய் - 2
எளியோர் வாழ எனைத் தந்தேன்
என்னில் தியாகம் நீ தந்தாய் - என் வாழ்வின்