முகப்பு


532. இதுவே நேரம் இதுவே காலம்
இதுவே நேரம் இதுவே காலம்
ஏற்றிடுவீர் எம் காணிக்கையை - 2
இறைஞ்சியே குருவின் கரங்களில் தந்தோம்
ஏகபிதாவே ஏற்றிடுவீர் - 2

1. உருவினில் அப்பமாய் இருந்தாலும் - இதை
இறைமகன் உடலாய் மாற்றிடுவீர்
பருக இரசமாய் இருந்தாலும் - உந்தன்
திருமகன் இரத்தமாய் மாற்றிடுவீர்
பலி இதனோடு பரம்பொருளே - என்
உள்ளம்நிறை யாவும் உரிமை தந்தோம் - 2

2. அனைத்தையும் படைத்த ஆண்டவரே - நின்
அருள்நிறை கருணையை வேண்டுகிறோம்
நினைவையும் சொல்லையும் செயலையும் உமக்கே
நேர்த்தியாய்த் தந்தோம் ஏற்றிடுவீர்
நலிந்தவை யாவும் நலம் பெறுமாறு
களிப்புடன் உமக்கே காணிக்கையாக்க - 2