முகப்பு


535. இரந்து படும் ஏழையின் பலி உமக்கு ஆகுமோ
இரந்து படும் ஏழையின் பலி உமக்கு ஆகுமோ - என்றும்
இணையில்லாத தேவனே இது தகுதியாகுமோ

1. கலைந்த வாழ்வும் கவலை நெஞ்சும் கருத்தில் வறிய செயலுமே - 2
நிறைந்த வாழ்விலே படும் துயரின் நிலையிலே - உமை
உணர்ந்து புகழ்கின்றேன் என்னை உவந்து அளிக்கின்றேன்
இனி என் வாழ்வில் இறைவனருளின்
இனிமை காணத் துடிக்கின்றேன்

2. மாசில்லாமை நிறைந்த உமது புனித பெருமை காண்கிறேன் - 2 மாசில் வாழ்கையில் மனம் வளைவதில்லையே - எமை
ஆளும் தேவனில் மனம் இணைவதில்லையே
குறைகள் தீர எனது கருத்தைக்
காணிக்கையென அளிக்கின்றேன்