551. உள்ளதெல்லாம் தந்தவரே உயிரோடு உள்ளவரே
உள்ளதெல்லாம் தந்தவரே உயிரோடு உள்ளவரே
உள்ளமெல்லாம் அள்ளி வந்தேன் போதுமா
நீர் தந்ததெல்லாம் தருவது தான் நியாயமா - 2
1. மலர்களையே கொய்து வந்தேன் மனதுருக்கம் உள்ளவரே
கனிகளையே கொண்டு வந்தேன் கனிவிரக்கம் கொண்டவரே
மணக்கும் வார்த்தை யாவும் கனிகள் கொடுக்கும் வாழ்வும்
தந்துவிட்டேன் ஏற்றிடுவீர் என்னவரே
2. அப்ப இரசம் கொண்டுவந்தேன் அன்புருவே காணிக்கையாய்
அடியவரை ஊட்டிடுவாய் உமதுடலாய் மாற்றியதை
அனுதின உணவாகும் கோதுமை மணிபோல
மாற்றிடுமே என்னையுமே என்னவரே