முகப்பு


567. என்ன காணிக்கை தருவேன் உம் மனம் கவர் பலியாக
என்ன காணிக்கை தருவேன் உம் மனம் கவர் பலியாக - 2
என்னையே தருவதன்றி மேலான பலியுண்டோ
உம் உள்ளம் ஏற்பதுண்டோ

1. காலைப் பனித்துளிகள் காணிக்கையாகுமே சூரியனுக்கு
மாலை மலர்ச்சரங்கள் காணிக்கையாகுமே சூடும் அவருக்கு
என் வாழ்வும் அப்படியே உந்தன் நல் சொற்படியே - 2
அர்ப்பணமாகவே அர்ப்பணமாகவே

2. விழிகளில் கண்ணீரும் காணிக்கையாகுமே மனம் திரும்ப
விழுந்திடும் இலைகளுமே காணிக்கையாகுமே மரம் வளர
என் வாழ்வும் அப்படியே உந்தன் நல் சொற்படியே - 2
அர்ப்பணமாகவே அர்ப்பணமாகவே