முகப்பு


569. என்னை முழுதும் உந்தன் கரத்தில்
என்னை முழுதும் உந்தன் கரத்தில்
தந்து விட்டேன் தந்து விட்டேன்
இணையில்லா அன்பைத் தந்து விட்டேன்
குறையில்லா வாழ்வைத் தந்து விட்டேன்
முழுதாய்த் தந்துவிட்டேன்

1. மலர்களும் கனிகளும் தந்துவிட்டேன்
மறுவில்லா மனத்தினை தந்துவிட்டேன்
அப்பரச காணிக்கை தந்துவிட்டேன்
ஆனந்த இதயத்தைத் தந்துவிட்டேன்
நிலையான மகிழ்வினைத் தந்துவிட்டேன்
நிறைவான உறவைத் தந்துவிட்டேன்
நிறைவாய்த் தந்துவிட்டேன்

2. வருங்கால வாழ்வினைத் தந்துவிட்டேன்
வரங்களும் வளங்களும் தந்துவிட்டேன்
உயர்வான நிலைகளைத் தந்துவிட்டேன்
உறவுகள் அனைத்தும் தந்துவிட்டேன்
உரிமைகள் உணர்வுகள் தந்துவிட்டேன்
உன்னத நிலைகளைத் தந்துவிட்டேன் உனக்காய்த் தந்துவிட்டேன்